Sunday, April 12, 2009

கோவை இராணுவ அலுவலகம் முற்றுகை! ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள இந்திய இராணுவங்களைக் கண்டித்து

ஈழத்தில் தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள இந்திய இராணுவத்தினை கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று காலை கோவையில் பேரணி மற்றும் இராணுவ அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வார்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு।இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்। தலைமை செயற்குழு உறுப்பினர் வெ।ஆறுச்சாமி முன்னிலை வகித்தார்। தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் பொள்ளாச்சி மனோகரன், உடுமலை கருமலையப்பன், மதுரை தமிழ்ப்பித்தன், பொள்ளாச்சி பிரகாசு , திருப்பூர் அங்கக்குமார், கொளத்துார் டைகர் பாலன், தாராபுரம் குமார், மற்றும் திருப்பூர் மாநகர அமைப்பாளர் சண்முகம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் துரை।சம்பத், திருப்பூர் இராவணன், அகிலன், பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, சேலம் மாவட்டத்தலைவர் மார்ட்டின், மேட்டுர் முத்துக்குமார், பல்லடம் விஜயன், கோவை கதிரவன், தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் ந।பன்னீர்செல்வம், ஈரோடு இராம।இளங்கோவன் , நாத்திகஜோதி , சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர் டேவிட் மற்றும் ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்।

குழந்தைகளுடன் பெண்களும் உட்பட சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். 12. 04. 2009 ஞாயிறு காலை 10.00 மணியளவில் தோழர்கள் கோவை அண்ணா சிலை அருகே குழுமியிருந்தனர். காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி இராணுவ முகாம் நோக்கிச் செல்ல முயன்ற தோழர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் கோவை பாலகி ருஸ்ணா மண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலை4.00 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

- கோவையிலிருந்து கதிரவன்


No comments:

Post a Comment