Sunday, April 12, 2009

விச வாயு குண்டுகளால் தமிழினப்படுகொலை நடத்தும் இந்திய/இலங்கை அரசுகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

ஈழத்தில் சிங்கள இராணுவம் இந்தியா கொடுத்த விச வாயு குண்டுகளைப் பயன்படுத்தி தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பதைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் கோவை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தைநடத்தியது.
07।04.2009 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் கோவை ஆறுச்சாமி, பொள்ளாச்சி மனோகரன், திருப்பூர் அங்கக்குமார், முகில்ராசு, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் கருமலையப்பன், கா.சு.நாகராசன், கோவை கதிரவன், மாநகரத் தலைவர் கோபால், சாஜித், தாராபுரம் குமார் ஆகிய பொறுப்பாளர்கள் உட்பட கோவை மாநகரம், கோவை தெற்கு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

தோழர் கு। இராமகிருடிணன் தமது கண்டன உரையில், பாலஸ்தீனின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பொழுது உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தது அதனால் இஸ்ரேல் தமது ராணுவத்தை திரும்பப்பெற்றது, ஆனால், அப்பாவி தமிழ்மக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்தும் தாக்குதலை உலக நாடுகள் கண்டிக்காமல் இருப்பதற்கு காரணம் இந்தியா தான், இந்தப்போரில் தலையிட்டுஅதை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் உலக நாடுகளை இந்திய தடுத்துவருகிறது என்றுக் கூறினார்।

மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு சீக்கியர்களுக்கு நடைபெற்ற கொடுமைக்கு காரணமான காங்கிரஸ் காரர் ஜகதீஷ் டைடலேரை அவ்வழக்கிலிருந்து விடுவித்தமை பற்றிய தமது கேள்விக்கு சரியான பதில் தராத இந்திய உள்துறை அமைச்சர் ப।சிதம்பரத்தின் மீது ஒரு சீக்கிய பத்திரிக்கையாளர் தமது பாதணியை வீசினார்।

அதுபோல ஆயிரக்கணக்கானதமிழர்கள் கொல்லப்படுவதை கண்டிக்காமல் சிறிலங்கா அரசுடன் நட்புபாராட்டும் காங்கிரஸ் காரர்கள் தமிழக மண்ணில் கால் வைத்தால் நம்செருப்புகள் கொண்டுதான் வரவேற்க வேண்டும்। இனி இப்படி கூடிப்பேசிபயனில்லை, எல்லாத் தமிழர்களும் செயலில் ஈடுபடவேண்டும்। ஒவ்வொரு தமிழனும் காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் எதிரான தத்தமது கண்டனத்தைவெளிப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய காங்கிரஸ் அரசுக்கும், அதை பதவிக்காக ஆதரித்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கருணாநிதியையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

No comments:

Post a Comment